திண்டுக்கல்லில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் கூட்டம்

திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல் என்ஜிஓ காலனி பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகிக்க, நகர செயலாளர் ராஜப்பா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜா, சீலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர்கள் விஜயா, இளஞ்செழியன், மலர்வண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், பொருளாளர் மணி முருகன், ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

*திண்டுக்கல்லில் மாவட்ட மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராகவன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செல்வேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, மாணவரணி அமைப்பாளர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories: