அனைத்து கட்சியினர் வழங்கினர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு

சீர்காழி,டிச.5: சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தாசில்தார் முன்னிலையில், தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியை தொடங்கியது இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எண்ணெய் கிணறு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பான சமாதான கூட்டம் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார் ஓன்ஜிசி பொதுமேலாளர் ரவிச்சந்திரன் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகர், துணை மேலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் தொடுவாய் மீனவ கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொடுவாய் கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க மீனவ தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாசில்தார் சாந்தி தொடுவாய் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: