திண்டுக்கல்லில் தொல்லை தந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி அதிரடி

திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு தொல்லை தந்த பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகளின் தொல்லைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் உத்தரவின்படி, போலீசார் உதவியுடன் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். செல்லாண்டியம்மன் கோயில் தெரு, அய்யங்குளம், காமராஜபுரம், ஆர்வி நகர், சிகேசிஎம் காலனி, பேகம்பூர், பூச்சிநாயக்கன்பட்டி, சாமியார்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பன்றிகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் வருகின்றனர் என்று முன்கூட்டியே தகவல் தெரிந்து கொண்டு சுற்றித்திரியும் பன்றிகளை பன்றி வளர்ப்போர் பிடித்து சென்று விடுகின்றனர். அதனால் வாரம் ஒருமுறை மாநகராட்சி சார்பில் இதுபோல் பன்றிகளை பிடித்தால், சுத்தமாக பன்றிகளை ஒழித்துவிடலாம்’ என்றனர்.

Related Stories: