அந்தியூர்-பர்கூர் இடையே 2ம் நாளாக போக்குவரத்து மாற்றம்

அந்தியூர், நவ.13: கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்தியூர்-பர்கூர் இடையே 2ம் நாளாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் கெட்டி சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 10 ஆண்டுக்கு பின்பு நிரம்பி உள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு கெட்டி சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் உள்ள பிரதான சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தியூர்-  பர்கூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தை  குருநாதசாமி வனக் கோவில், பட்டக்காடு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. பைக், கார் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏரிக்கரையின் விரிசல் இன்னும் சரி செய்யப்படாததால் கனரக வாகனங்கள் தொடர்ந்து 2ம் நாளாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. கெட்டிசமுத்திரம் ஏரிக்கரை மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள விரிசலை பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: