காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 39 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள்் கோரி திமுக எம்பி, எம்எல்ஏ மனு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திமுக எம்பி செல்வம் ஆகியோர் 39 ஊராட்சிகளில் குடிநீர், சாலை, விளக்கு, பஸ்   வசதி உள்பட அடிப்படை வசதியை நிறைவேற்றக்கோரி 200 மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லீமாரோஸ் மற்றும் பாபு ஆகியோரிடம் நேற்று வழங்கினர்.அந்த மனுவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட  வேங்கடமங்கலம், அஞ்சூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன்கடைகளை, மக்களுக்கு பயன்படும் வகையில் உடனடியாக திறக்க வேண்டும். மண்ணிவாக்கம் சாலையை சீரமைத்து, அவ்வழியாக பஸ்களை  இயக்க வேண்டும். கீரப்பாக்கம், வேங்கடமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.மேலும், ெபாதுமக்களின் கோரிக்கை மனுக்களை 20 நாட்களுக்குள் பரிசீலனை செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.   இது சம்பந்தமாக கலெக்டமும் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. 25 நாட்களுக்கு பிறகு எந்தெந்த பணிகள் நடைபெற்றுள்ளன என நேரில் ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக குடிநீர் பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது, திமுக நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், திருமலை, சண்முகம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அருள்தேவி, ஈஸ்வரி, ரவிச்சந்திரன், சண்முகம், தர்மன் மற்றும் 39 திமுக ஊராட்சி  செயலர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: