மாவட்டம் பாதிக்கும் ஊராட்சி பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் எதிரொலி கம்பம் மருத்துவமனையில் கலெக்டர் திடீர் விசிட்

கம்பம், அக். 18: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் சம்பந்தமாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் விசிட் மேற்கொண்டார். அப்போது காய்ச்சல் தடுப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களான கூடலூர்,சுருளிப்பட்டி, கே.கே பட்டிக்கு நேற்று காலை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீரென ஆய்வுமேற்கொண்டார்.அப்போது அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் தடுப்பு பிரிவை பார்வையிட்டார். மருத்துவமனை வளாகத்திலிருந்த அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கிருந்த குடிநீர், உணவு போன்றவற்றை பரிசோதித்ததுடன், சுகாதாரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார்.அப்போது தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சரஸ்வதி, உத்தமபாளையம் சார்- ஆட்சியர் வைத்தியநாதன்,கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: