நெசவாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் காங். நெசவாளர் பிரிவு வேண்டுகோள்

பரமக்குடி, அக்.18:  தமிழகத்திலுள்ள நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1000  என்பதை  3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம் பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் கோதண்டராமன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட நெசவாளர் அணிக்கு தலைவராக சந்திரன். செயலாளர் மாதவன், பொருளாளராக ரெங்காச்சாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மீனவர்களுக்கு மீன் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க தடை செய்வதற்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை போன்று, நெசவாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளி விற்பனைக்கு அரசு வழங்கும் ரிபேட் தொகைக்கான உச்ச வரம்பை தளர்த்தி ஜவுளி விற்பனையின் முழு தொகைக்கு ரிபேட் வழங்கவேண்டும். .நெசவாளர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகை ரூபாய் ஆயிரத்தை உயர்த்தி ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.

Related Stories: