ஆர்.கே.பேட்டை அருகே வரத்து கால்வாய் தடுப்பு சுவர் சேதம்

பள்ளிப்பட்டு, அக். 17: ஆர்.கே.பேட்டை அருகே நீர் வரத்து கல்வாய் உடைந்து சேதமடைந்துள்ளதால், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதமடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்  கரும்பு, நெல், வாழை, கடலை உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றது. மழை காலங்களில்  நீர் வரத்து கால்வாய் நிரம்பி வெள்ளம்  விவசாய நிலங்களில் பெருக்கெடுத்து பயிர்கள் சேதமடைந்து வந்தது.

இதனால், அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  பாலாபுரம் நீர் வரத்து கால்வாய் கரைப் பகுதியில் பொதுப்பணித் துறை நிதியிலிருந்து ₹ 5 லட்சம் மதிப்பீட்டில்  தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும்,  கடந்த  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏரிக்கரையில் மண் சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் உடைந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில்,  கன மழை  பெய்தால், கால்வாயில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள  விவசாயகள் சாகுபடி செய்த யிர்கள் மழை நீரில் முழ்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு  பாலாபுரம்  நீர் வரத்து கால்வாய் கரையை பலப்படுத்தும் வகையில்  தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: