ராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி மாடு பலி

ராமேஸ்வரம், செப்.17:  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தேவஸ்தான அலுவலகம் எதிரில் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இதன் முன்பு நேற்று அதிகாலை பசுமாடு ஒன்று உயிரிழந்து கிடந்தது. தங்கும் விடுதிக்கு செல்லும் ஜெனரேட்டர் மின்சாரத்திற்கான எர்த்கம்பி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இறந்து கிடந்ததால் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து மாடு இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பசுமாடு உயிரிழந்ததற்கு கோயில் நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்ததுதான் காரணம் என்றும் கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோயில் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பசுமாட்டை கைப்பற்றி விசாரித்தனர். வயிற்றில் கன்று இருந்த நிலையில் உயிரிழந்த மாட்டின் உரிமையாளர்கள் யாரும் வராததால் மாட்டை பரிசோதனை செய்வதற்கு கால்நடை மருத்துவர் வசம் அனுப்பி வைத்தனர். மருத்துவரின் பரிசோதனைக்குப்பின் மாட்டின் உடல் நகராட்சி பேருந்து நிலையம் பின்பகுதியில் நகராட்சி ஊழியர்களால் மணலில் புதைக்கப்பட்டது.

Related Stories: