திருத்தணியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

திருத்தணி, ஆக. 22: திருத்தணி அரசு கலைக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மேதினாபுரம் பகுதியில் திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட  திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ₹14.50 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தார். அந்த நிதியில் நவீன பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.அதன் திறப்புவிழா  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.  நரசிம்மன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

அமைச்சர் பெஞ்சமின்  பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொன்னேரி எம்.எல்.ஏ., சிறுனியம் பலராமன், ஆவின் சேர்மன் சந்திரன், திருத்தணி தாசில்தார் செங்கலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி, பாபு,  வருவாய் ஆய்வாளர் உதயகுமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: