இரண்டுபோகம் நெல் சாகுபடி வேளாண்மைத்துறை முயற்சி

தேனி, ஆக.14: தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டே இரண்டு போகம் நெல் சாகுபடி எடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் நடக்கும். இங்கு ஜூன் மாதம் நடவு செய்து செப்டம்பருக்குள் அறுவடை முடிந்து விடும். தற்போது மிகவும் தாமதம் ஏற்பட்டாலும், இரண்டாம் போகம் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரியில் அறுவடை நடக்கும். தற்போது பெரியாறு அணை நீர் மட்டம் 131 அடியை கடந்துள்ளது.

எனவே குறுகிய காலத்தில் அதாவது 105 நாட்களுக்குள் அறுவடையாகும் நெல் வகைகளை சாகுபடி செய்து, இந்து ஆண்டே இருபோகமும் நெல் சாகுபடி எடுக்க விவசாயிகளை தயார்படுத்தி வருகிறோம். இதற்கான விதை நெல், தொழில்நுட்பம், உரங்கள், கடனுதவி உட்பட விவசாயிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து வருகிறோம். அணையில் தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் தாமதம் இன்றி செயல்பட்டால் நிச்சயம் இந்த ஆண்டு இரண்டு போகம் நெல் சாகுபடி எடுத்து விட முடியும். இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: