ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு

ஈரோடு, ஆக. 11:  அரசு  பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று 7 மையங்களில்  நடந்த ஒருங்கிணைந்த பொறியியல்  பணிக்கான தேர்வினை ஈரோட்டில் 1833 பேர் எழுதினர்.  தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள  அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், அசிஸ்டெண்ட் இன்ஜினியர், ஜூனியர்  அசிஸ்டெண்ட் உள்ளிட்ட 475 ஒருங்கிணைந்த பொறியியல் காலிப்பணியிடங்களுக்கான  போட்டித்தேர்வு நேற்று நீலகிரி மாவட்டம் தவிர மாநிலம் முழுவதும் நடந்தது. ஈரோடு  மாவட்டத்தில் 7 மையங்களில் இத்தேர்வு நடந்தது.  ஈரோடு அரசு பெண்கள்  மேல்நிலை பள்ளி, ரயில்வே காலனி பள்ளி, கலைமகள், செங்குந்தர், விவிசிஆர்.,  பள்ளி, வேளாளர் கல்லூரி, சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளி என 7 மையங்களில்  அமைக்கப்பட்டுள்ள 9 தேர்வுகூடங்களில் காலை, மதியம் என இரு வேளையும் தேர்வு நடந்தது.  இத்தேர்வினை எழுத 2764 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1833 பேர்  மட்டுமே தேர்வு எழுதினர். 931 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள்  கூறினர். தேர்வில் முறைகேடுகளை கண்காணிக்க 3 நடமாடும் கண்காணிப்பு குழு, 9  முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர்  கவிதா தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Related Stories: