மறுவாழ்வு சிகிச்சை அளிக்க ஏற்பாடு நீரை தேக்கு.. துன்பம் போக்கு

ஒட்டன்சத்திரம், ஜூலை 24:  ஒட்டன்சத்திரம் ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் நீர் மேலாண்மை இயக்கம் 2019 சார்பில் மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு கலன்கள் உருவாக்குதல், விழிப்புணர்வு பேரணி என முப்பெரும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா தலைமை வகிக்க, தலைமையாசிரியர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து மரம் நடுவதன் அவசியம், மழைநீர் சேகரிக்கும் முறை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் மேலாளர்கள் சண்முகம், செல்வி, ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, ஊராட்சி ஊக்குவிப்பாளர் சரவணக்குமாரி, திட்ட கணக்காளர் நாகலெட்சுமி, மாவட்ட பயிற்றுனர் செல்வக்கொடி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் நீரை தேக்கு துன்பம் போக்கு, நீரின்றி நாம் இல்லை, நீரின்றி உயிர் இல்லை, ஊர் கூடி குளம், குட்டைகளை தூர்வாருவோம், நீர்பெருக்கி ஊர் காக்க சபதம் ஏற்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி சென்றனர். ஊராட்சி செயலர் கர்ணன் நன்றி கூறினார்.

Related Stories: