வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை

தேனி, ஜூலை 23:  வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடந்தது. இந்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சார்பில் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சுமார் 300 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். வீடில்லாத தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும்,  வீட்டுமனைப்பட்டா இடத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஏஐகேஎம்.எஸ் மாநில தலைவர் இளங்கோ,  மாநில செயலாளர் ஸ்டாலின்பாபு, மாநில பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை மனுக்களை மொத்தமாக வைத்து கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து வழங்கியபோது, மொத்தமாக கலெக்டர் மனு வாங்க மறுத்தார். இதனையடுத்து, தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: