தேனி மையப்பகுதியிலிருந்து புதிய பஸ்ஸ்டாண்டிற்கு பஸ் இயக்க கோரிக்கை

தேனி, ஜூலை 23:  தேனி புதிய பஸ்ஸ்டாண்டிற்கு தேனி நகரின் மையப்பகுதியில் இருந்து மினி பஸ் அல்லது டவுன்பஸ் இயக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் இதன் மாவட்ட செயலாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் தேனி கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், தேனி நகரின் மையப்பகுதியான சிவராம்நகர், எம்.ஜி.ஆர்நகர் உள்ளது. இப்பகுதியில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அதிகஅளவில் வசித்து வருகின்றனர். தேனி நகர் பெரியகுளம் சாலையில் ரயில்கேட் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்ல என்.ஆர்.டி நகர் சாலை வழியாக பாதை வசதி உள்ளது. இதில் சிவராம் நகர், எம்.ஜி.ஆர் நகரை அடுத்து, சிவாஜி நகர், விஸ்வநாததாஸ் நகர் உள்ளன. இங்கும் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.  தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு பஸ் வசதி உள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியிலிருந்து எம்ஜி.ஆர். நகர், சிவராம் நகர், சிவாஜி நகர், விஸ்வநாததாஸ் நகர் பகுதிக்கு மினிபஸ் அல்லது டவுன்பஸ் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிததிருந்தனர்

Related Stories: