பாசிப்பச்சை நிற பட்டு உடுத்திய அத்திவரதர்

காஞ்சிபுரம், ஜூலை 23: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர். மேலும், பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த 21 நாட்களில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். தினமும் ஒரு வண்ணத்தில் பட்டு உடுத்தி அருள்பாலிக்கும் அத்திவரதர் நேற்று பாசிப்பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அத்திவரதர் வைபவத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நாளுக்கு நாள்  பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வாரத்தின் முதல் நாளான நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Related Stories: