இருளர் இன மாணவர்கள் 8 பேர் ஆதிதிராவிடர் நல பள்ளியில் சேர்ப்பு

சிதம்பரம், ஜூன் 18: சிதம்பரம் அருகே தில்லை

நாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 8ம் வகுப்பு வரை உள்ளதால் அப்பகுதி மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தில்லைநாயகபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி களில் பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா? என பள்ளி ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தில்லைநாயகபுரம் பாசிமுத்தான் ஓடை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது. பள்ளி ஆசிரியர்கள் இருளர் இன மக்களிடம் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் இருளர் இன மக்கள் பள்ளி செல்லாத 14 பேரை பள்ளிக்குஅனுப்ப முன்வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தில்லைநாயகபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 8 இருளர் இன மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சேவியர், பட்டதாரி ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். இப்பள்ளியில் சர்வ சிக்ஷா அபியான் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ராஜ என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிற

து. மீதியுள்ள 6 மாணவ, மாணவிகளை ஒரு சில நாட்களில் பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: