சிறந்த பளுதூக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், மே 23: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பளுதூக்கும் விளையாட்டில் சிறந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் பளுதூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் அரசின் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு விளையாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நடப்பாண்டிற்கு பளுதூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயிலும் வகையில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் துவங்கப்படவுள்ள முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி நடப்பாண்டில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயில உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு பயில உள்ள மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான மாநில அளவில் தேர்வு என்பது வரும் 30ம் தேதி காலை மேற்படி சத்துவாச்சாரி விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பளுதூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் இந்த விடுதியில் தங்கி பயில்வதற்கு ஆன்லைன் மூலமாக வரும் 29ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: