மாவட்டம் தேனி மாவட்ட எஸ்பியுடன் திண்டுக்கல் டிஐஜி ஆலோசனை தேவதானப்பட்டியில் வாழை தார் விலை வீழ்ச்சி

தேவதானப்பட்டி, மே 21: தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாழை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு உழவு, வாழை கன்று, நடவு, களையெடுப்புகள், தொழுஉரமிடுதல், ரசாயன உரமிடுதல் உள்ளிட்டவைகளால் ரூ.50ஆயிரம் முதல், ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது. நடவு செய்து 10மாதம் முதல் 12மாதங்கள் கழித்து வாழை தார் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்யப்பட்ட வாழை தார்கள் விலை மிகவும் குறைவாக விற்கப்படுகிறது.

இதுகுறித்து குள்ளப்புரத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் கூறுகையில், `` ஒரு வருடம் கஷ்டப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்த வாழை சாகுபடி அறுவடை செய்யும் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டால் விவசாயிகள் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாரிவிடுகிறது.  நடப்பாண்டில் அதிக செலவு செய்து வாழை சாகுபடி செய்துவந்த நிலையில் கடந்த மாதம்  சூறைக்காற்றுடன் பெய்த கன மழைக்கு பல நூறு ஏக்கர் வாழை தார்போட்ட நிலையில் சேதமடைந்தது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சூறைக்காற்றுக்கு தப்பிய வாழை தார்கள் தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: