ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

காட்டுமன்னார்கோவில், ஏப். 21: காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவி பிரித்தி 600க்கு 556 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கோகிலா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஹரிணி 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 16 பேரும், 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 70 பேரும், மேலும் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 77 மாணவர்களும் ஏ-கிரேடு பெற்றுள்ளனர். மேலும் தமிழ் பாடத்தில் 20 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 7 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 8 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 16 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 6 மாணவர்களும், கணித பாடத்தில் 12 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 2 மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் ஏ-கிரேடு பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை பள்ளியின் தாளாளரும் ஜி.கே.கல்வி குழுமத்தின் தலைவருமான குமாரராஜா பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் செயலர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் குமாரராஜா பாராட்டினார்.

Related Stories: