ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்க்க, விற்க தடை

திருவள்ளூர், மார்ச் 19: ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளர்க்க, விற்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்  அறிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டத்தில்  இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன்வகைகளான வெள்ளி கெண்டை, புல்  கெண்டை, சாதா கெண்டை மற்றும் கிப்ட் திலேபியா போன்ற மீன்வகைகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளினால், ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன்  இனங்கள், மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியதும், நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும்  அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை உடையது.எனவே, மத்திய, மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: