மது அருந்தும் பாராக மாறி வரும் திருநறையூர் பேருந்து நிழற்குடை

கும்பகோணம், மார்ச் 15: திருநறையூர் பேருந்து நிழற்குடை மதுக்கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருநறையூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 2012ம் ஆண்டு பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. பின்னர் போதுமான பராமரிப்பு இல்லாததால் குடிமகன்களின் கூடாரமாக மாறி விட்டது. மேலும் பேருந்து நிழற்குடையில் பயணிகள் அமரும் சிமென்ட் கட்டைகளை மர்மநபர்கள் உடைத்துவிட்டனர். இதனால் பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருநறையூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் பேருந்துக்காக பொதுமக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருநறையூர் பேருந்து நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் ெதரிவித்துள்ளனர்.

Related Stories: