சிவகாசி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி

சிவகாசி, மார்ச் 15: சிவகாசியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மக்களைவை தேர்தல் ஏப்.18ல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசியில் சாத்தூர், விருதுநகர் ரோட்டில் உள்ள போலீஸ்  செக்போஸ்டில் 24 மணிநேரமும் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் சாலையில் செல்லும் கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரின் டிக்கி, இருக்கைகளை பரிசோதித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்நத் வாகனங்களை நிறுத்தி தீவிர கண்காணிப்பு செய்கின்றனர். இதேபோல் கட்சி கொடியுடன் வரும் வாகனங்களையும் மடக்கி திவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். சிவகாசி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனையால் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: