எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 445 பேர் எழுதினர்

தேனி, மார்ச் 15: தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை 16 ஆயிரத்து 445 மாணவ,மாணவியர் எழுதிய நிலையில் 432 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்டாகினர்.  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தேர்வாணையம் மூலமாக நேற்று (14ம்தேதி) முதல் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு தொடங்கியது. முதல்நாளான நேற்று மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தேர்வு மார்ச் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் மூன்று கல்வி மாவட்டங்களையும் சேர்த்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், கள்ளர், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் என மொத்தம் 202 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 298 மாணவர்கள், 7 ஆயிரத்து 838 மாணவியர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 136 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக தேனி கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களும், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்களும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களுமாக மொத்தம் 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தனித்தேர்வர்களுக்காக பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் ரேணுகா மெட்ரிக் பள்ளி தேர்வுமையத்தில் 201 மாணவ, மாணவியர்களும், தேனி கல்வி மாவட்டம் வேலம்மாள் பள்ளி தேர்வு மையத்தில் 146 மாணவர்களும், போடி ஜெட்கேஎம் பள்ளி தேர்வு மையத்தில் 96 மாணவியர்களும், உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சின்னமனூர் காயத்ரி பள்ளி தேர்வுமையத்தில் 254 மாணவ, மாணவியர்களுமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நேற்று நடந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களில் விண்ணப்பித்த 16 ஆயிரத்து 136 பேரில் 15ஆயிரத்து 783 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 380 மாணவ,மாணவியர் தேர்வு எழுதவில்லை. 741 தனித்தேர்வர்களில் 662 பேர் தேர்வு எழுதினர். 52 பேர் தேர்வு எழுதவில்லை. பள்ளியில் விண்ணப்பித்தோர் மற்றும் தனித்தேர்வர் என மொத்தமுள்ள 16877 மாணவ, மாணவியர்களில் 16445 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 432 பேர் தேர்வு எழுதவில்லை. இதன்மொத்த தேர்வு எழுதியோர் 97.,4 சதவீதமாகும்.  இத்தேர்வுக்காக பறக்கும் படைகளும், நகரும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வினையொட்டி  மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தேனியில் உள்ள பிசி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் தேர்வினை ஆய்வு செய்தார்.

432 பேர் ஆப்சென்ட்

Related Stories: