அதிவேக ஜீப்களால் தொடரும் விபத்து

பெரியகுளம், மார்ச் 14: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் ஜீப்கள், டூவீலர்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் தொடர்கதையாகிறது. போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை, அகமலை மலைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் தோட்ட தொழிலாளர்களை எற்றிக்கொண்டு அதி வேகமாக செல்லும் ஜீப், டுவீலர்களால் மாதம் 5 விபத்துக்கள் ஏற்படுகின்றன.பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவிற்குள் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கன்னக்கரை, சொக்கன்இலை, கரும்பாறை, ஊரடி, ஊத்துக்காடு, அண்ணாநகர் உட்பட 12 உட்கடை மலைக்கிராமங்கள் உள்ளன. ஏலம், காபி, எலுமிச்சை, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.12 அடி அகலம் உள்ள சின்னமலைப்பாதை ரோட்டில் ஜீப்களில் விதி மீறி அதிக எண்ணிக்கையில் தோட்ட தொழிலாளர்களை எற்றிக்கொண்டு வேகமாக செல்கின்றனர்.

இதில் சில டிரைவர்கள் லைசென்ஸ் எடுக்காமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். 200 சிசி டூவீலர்களையும் சிலர் வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால் எதிரே வரம் வாகனம் மற்றும் சுமை தூக்கி செல்லும் குழுதிரைகள் மீது மோதி காயப்படுத்துகின்றனர்.மாதம் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. தொழிலாளர்களுக்கும் ஆபத்து உள்ளது. தென்கரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: