புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விழிப்புணர்வு செயல்விளக்க முகாம்

புதுக்கோட்டை, பிப். 14: புதுக்கோட்டை  நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள 127 வாக்குச்சாவடி மையங்களில்  மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் யாருக்கு  வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு செயல்விளக்க முகாம் நடந்தது.புதுக்கோட்டை ரயில்  நிலையம் அருகே உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் வாக்களிப்பது குறித்த  செயல்விளக்கம் நேற்று நடந்தது. நகராட்சி மேலாளர் ஹேமலதா தலைமை  வகித்தார். நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் பங்கேற்று வாக்களிப்பது  குறித்த செயல்விளக்கத்தை பார்வையிட்டு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  ஆலோசனை வழங்கினார். சுகாதார ஆய்வாளர் தங்கராமு, நகராட்சி தேர்தல்  பிரிவு அலுவலர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: