கும்மிடிப்பூண்டியில் தடைசெய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, பிப். 14: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட  200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அபராதமாக₹45 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உதவி இயக்குநர் கோ.கனகராஜ்,  செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் பஜார் பகுதி, பைபாஸ் சாலை, ம.பொ.சி. நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, பழைய தபால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மளிகைக்கடைகள், உணவு விடுதிகள், சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவ்வாறாக  22 கடைகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதமாக ₹45 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: