கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன வாயிற் கூட்டம்

கும்பகோணம், பிப். 13: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொமுச, ஏஐடியுசி, சிஐடியு  உள்ளிட்ட அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பின் கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டலங்களின் சார்பில்  கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மணிமாறன்  தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகி குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் தொமுச பொதுச்செயலாளர் பாண்டியன், ஏஐடியுசி பேரவை துணை செயலாளர் துரைமதிவாணன், ஐஎன்டியுசி, டிஎம்சி கலியன், சிஐடியு மாநில துணை தலைவர் கண்ணன், ஐஎன்டியுசி தலைவர்  வைத்தியநாதன், எச்எம்எஸ் பொதுசெயலாளர் முருகேசன், எம்எல்எப் பொது  செயலாளர் பாலு, நிபச தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினர்.

இதில் பஸ்களின் எண்ணிக்கையை கிளை மேலாளர்கள் குறைப்பது, சேமப்பணியாளர்கள்,  தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரத்தை தடைசெய்வது, பாதுகாவலர் பிரிவு,  அலுவலக உதவியாளர்கள், மஸ்தூர், துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை  முற்றிலுமாக ஒழித்து விட்டு அந்த பணிகளுக்கு வெளியாட்களை நியமிப்பது, தடங்களின்  தூரத்தை விருப்பம்போல் கி.மீட்டர்களை அதிகரித்து பணி நேரத்தை அதிகப்படுத்துவது,  விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் போடுவது, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வு கால  பலன்களை 1 ஆண்டுக்கும் மேலாக வழங்காமல் உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு டிஏ.  ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்கப்படாமல் உள்ளது உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: