தேனியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாய் மறுகாலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை

தேனி, பிப். 13: தேனியில் மீறுசமுத்திரம் கண்மாயில் பழமையான மறுகால் கட்டுமானத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு மீனவ சங்கத்தினர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தேனி அல்லிநகரம் கூட்டுறவு மீனவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், மீறு சமுத்திரம் கண்மாயில் மீன் வளர்க்க ஏலம் எடுத்து குத்தகை காலம் முடிந்த பின்னும் மீன்வளர்த்த சிலர் மீன்களை பிடிப்பதற்காக மீறு சமுத்திரம் கண்மாயில் உள்ள நீரை வெறியேற்ற 100 பழமையான மறுகால் கட்டுமானத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்துள்ளனர். இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடைக்கப்பட்ட மறுகால் கட்டுமானத்தை சீரமைப்பதோ, மறுகாலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: