சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம், பிப்.13: தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சாம்சங் நிறுவனம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங்  நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் அண்ணா அரங்க வளாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பைக்கில் புறப்பட்டு மூங்கில் மண்டபம், பஸ் நிலையம், காந்தி சாலை, தேரடி, ரங்கசாமி குளம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம், வரதராஜப் பெருமாள் கோயில், வாலாஜாபாத் வழியாக சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவனம் வரை சென்றனர். இதில், ஏடிஎஸ்பி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

அதேபோல் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து, சாலை பாதுகாப்பு அவசியம், பைக்கில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிக்கும் போது சீட்பெல்ட் அணியவேண்டும், சாலை விதிகளை மதித்து நடக்கவேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், செங்கோட்டுவேல், ரங்கம்மாள் வித்யாலயா நர்சரி பள்ளி முதல்வர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: