விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சாயல்குடி, பிப்.12: முதுகுளத்தூர் அருகே கருங்காலகுறிச்சி விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

முதுகுளத்தூர் அருகே கருங்காலகுறிச்சி வல்லப்பை மகாகணபதி மற்றும் பரிவார தேவதைகள், கிராம தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. முதல்காலம் முதல் மூன்றாம் கால பூஜைகள் வரை நடந்தது.  நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜைகள் மற்றும் வேத பாராயணம், தீபாராதணை யாத்ராதானம் நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டது. கருடன் வந்ததும் கோயில் கோபுரம் மற்றும் கோபுர விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சுவாமி விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: