அரசு பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

ராமநாதபுரம், ஜன.22: கமுதி தாலுகா த.புனவாசல் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரி இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில், கமுதி தாலுகா த.புனவாசல் கிராமத்தில் 1ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு த.புனவாசல் பஸ் நிறுத்தம் அருகே வீர சோழன் ஊருக்கு செல்லும் சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்து.

இப்பள்ளி அருகிலேயே 200மீ தொலைவில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. அவ்வழியாக பள்ளிக்கு செல்கின்றோம். சிலர் குடித்துவிட்டு மாணவ, மாணவிகளை கேலி கிண்டல் செய்தும் தவறாகவும் பேசுகின்றனர். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளி திறக்கப்படும் நாட்களில் பள்ளியின் வளாகம் முழுவதும் மதுபாட்டில்கள் குப்பைகளாக கிடக்கிறது. இதை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மன வேதனை அடைகின்றனர். எங்கள் கிராமத்தினர் இளைஞர்கள், பெண்கள் யாரும் மதுபான கடையை விரும்பவில்லை. கடையை அகற்றி எங்களில் மன உளைச்சலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: