நாச்சியார்கோவிலில் கைவினை ெபாருட்களின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி

திருவிடைமருதூர், ஜன. 22:  திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினைத்துறை சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்களின்  செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று துவங்கியது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினைத்துறை உதவி இயக்குனர் வினோத்குமார் தலைமை வகித்தார். இதில் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை ஓவியம், கருப்பூர் கலம்காரி, சுவாமிமலை சிற்பங்கள், நெட்டி பொருட்கள் என பாரம்பரிய கலைநய பொருட்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்று பொருட்கள் தயாராகும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், நாச்சியார்கோவில் வெண்கல உற்ப்பத்தியாளர் தொழிலாளர் சேவை கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு வங்கி பொருப்பாளர்கள் கூகூர் இளங்கோ, பாலகிருஷ்ணன், வளர்மதி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்று கைவினை பொருட்களை பார்வையிட்டனர். விழாவில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் 150 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Related Stories: