பண்ருட்டியை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற வேண்டும்

பண்ருட்டி, டிச. 11:  பண்ருட்டி நகராட்சி, பொது சுகாதார பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட செயலாக்கம் ஆகியோர் இணைந்து மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தை நகராட்சி வளாகத்தில் நடத்தினர். நகராட்சி ஆணையர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். துப்புரவு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜனவரி 1ம் தேதி முதல் பண்ருட்டி நகரம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழித்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், போதியளவில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும், வீடுகள் தோறும் பிரசார நோட்டீஸ்கள் வழங்கி கட்டாயமாக பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: