மண்டபம் ரயில் நிலையத்தில் குடிக்க தண்ணீர் கூட இல்லை வேதனையில் பயணிகள்

மண்டபம், டிச.7:  பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மண்டபம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.  மண்டபம் பகுதியில் ஏராளமான அரசு அலுவலகம் மற்றும் தனியார் தொழில் நிலையங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மண்டபம் பகுதி மக்கள் என பெரும்பாலானோர் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மண்டபம் ரயில் நிலையத்தில் பல்வேறு ரயில்கள் கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்கப்படும் ரயில் நிலையமாகவும், இயற்கை சீற்றங்கள் வரும் போதுதெல்லாம் ராமேஸ்வரத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல முடியாததால் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கும் ரயில் நிலையமாகவும் மண்டபம் ரயில் நிலையம் உள்ளது.

தற்போது பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் எற்பட்ட விரிசல் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் தினந்தோறு ஆயிரக்கனக்காண சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மண்டபம் ரயில் வந்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் அவதியடையும் அவல நிலையுள்ளது. மேலும் மண்டபம் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை சேதமடைந்தும், குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்தும் காட்சி பொருளாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மண்டபம் ரயில் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையுள்ளது. மேலும் ரயில் நிலையத்தை சுற்றியும் கருவேல மரங்கள் வளர்ந்து காடுகளாக காட்சி அளிக்கிறது.

இதனால்  சமூக விரோதிகளின் மது அருந்தும் பாராக உள்ளது.  இதனால் தென்னக ரயில்வே நிர்வாகம் உடன் தலையிட்டு மண்டபம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: