அரியலுார் மாவட்டத்தில் உரிமம் இன்றி பழ மரக்கன்றுகள் விற்றால் விற்பனையாளர் மீது நடவடிக்கை

அரியலூர்,டிச.6: திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதவது: விதை உரிமமம் பெறாமல் முந்திரி, மாபலா, நெல்லி, தென்னை மற்றும் பழ மரகன்றுகளை விற்பனை செய்வது விதை தரக்கட்டுபாட்டு ஆணை, 1983-ன்படி குற்றமாகும். விவசாயிகளின் நலன் கருதி பழ மரகன்றுகளை விற்பனை செய்பவர்கள் விதை தரக்கட்டுபாட்டு ஆணையிகீழ் விதை வணிக உரிமம் பெற்றுதான் விற்பனை செய்யவேண்டும்.

விதை வணிக உரிமம் பெறாமல் நாற்றுகள் மற்றும் கன்றுகளை விற்பனை செய்யும் நர்சரி பண்ணைகள் மீது விதைத்தரகட்டுபாட்டு ஆணை 1983 பிரிவு 3ஐ மீறியதாக வழக்கு தொடரப்படும். அகவே விவசாயிகளும் தரமான கன்றுகளை வாங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற நர்சரி பண்ணை களில் மட்டுமே கன்றுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: