இளம்பெண்கள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

உத்திரமேரூர், டிச.6: உத்திரமேரூர் அடுத்த பாப்பாங்குளம் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இளம் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வழிகாட்டி  பெண்கள் இயக்க இயக்குநர் வசந்தா தலைமை தாங்கினார். பெண்கள் நல முன்னேற்ற சங்க நிர்வாகி செல்வம், வழிகாட்டி பெண்கள் இயக்க நிர்வாகி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ஹக்கீம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில்  பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்திடுவது, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் அதற்கான சட்டங்கள், குழந்தை திருமண தடைச் சட்டம், வரதட்சணை  தடுப்புச் சட்டம், பெண்களுக்கான கட்டாய கல்வி பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பள்ளி மாணவியர்களிடையே பேச்சுப், பாட்டு, கவிதை போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவியர்கள் ஆசிரியர்கள்  தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் கடந்த மாதம் நவம்பர் 25 ல் துவங்கி டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

Related Stories: