கரூர் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் தரலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

கரூர், நவ. 28: பைனான்சில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர்- கோவை சாலையில் இயங்கி வந்த அனுராம் கேபிட்டல் என்ற நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த நபர்களுக்கு பணம் திருப்பி தராத நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதால் பணம் கிடைக்காதவர்கள் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர், மேலும் புலியூர் வெள்ளாளப்பட்டி ஜிபிஎம் கிரடிட்ஸ், வடக்கு நரசிம்மபுரம் நல்லிகார்ப்பரேசன், வேலாயுதம்பாளையம் சிவலட்சுமி கிரிடிட்ஸ், கேபிட்டல்ஸ், ஜவகர்பஜார் எஸ்கேகேஎன்இ, ஆனைமுகன் கார்ப்பரேசன் மற்றும் பைனான்ஸ், அன்சாரிதெரு மகுடம் பைனான்ஸ், எண்டர்பிரைசஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஆகிய நிதிநிறுவனங்களில் டெபாசிட் செய்த தொகையை முதலீட்டாளர்கள் அனைவரும் மதுரை டிஎன்பிஐடி கோர்ட் மூலமாக பெற்று கொண்டனர். இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: