பேரூராட்சி நிர்வாகம் செயல் இழப்பு முத்துப்பேட்டை மக்கள் கொந்தளிப்பு கலெக்டரிடம் புகார்

முத்துப்பேட்டை, நவ.14: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபகாலமாக      சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்களுக்கு குடிநீர், சாலை தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பபட்டுள்ளது. இந்தநிலையில் முத்துப்பேட்டை தமுமுக சார்பில் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் நவாஸ், நகர செயலாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவளிதனர். அதில் முத்துப்பேட்டை பேருராட்சி செயல்பாடுகள் இன்றி உள்ளது.

இதனால் குடிநீர் வசதி, சுகாதாரம், சாலை வசதிகள் சரியாக செய்து கொடுப்பதில்லை. பல்வேறு முறை தமுமுக சார்பாக மனு கொடுத்தும் செயல் அலுவலரை சந்திந்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே தாங்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அணைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டுகிறோம் என மனுவில் குறிபிட்டுள்ளனர்.

Related Stories: