பொதுமக்கள் வேண்டுகோள் கீழக்கரை பகுதியில் அகற்றாத குப்பையால் எப்போதும் துர்நாற்றம்

கீழக்கரை, நவ.12:  கீழக்கரை அன்புநகரில் குடியிருப்புக்கு அருகில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் பல நாட்களாக அகற்றாமல் உள்ளது. இதனால் குப்பகைள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடத்தியது. அதன் பிறகு பல நாட்களாக நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றாததால், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடன் அந்த குப்பைகளை அகற்றி மீண்டும் அந்த இடத்தில் போடப்படும் குப்பைகள் சேராமல் அவ்வப்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: