மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

திருத்தணி, நவ. 8: திருத்தணி - அரக்கோணம் சாலையில் திருத்தணி கோட்ட மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட கேஜி கண்டிகை, ஆர்கே பேட்டை, பொதட்டூர்பேட்டை, பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், அத்திமாஞ்ேசரி பேட்டை, பள்ளிப்பட்டு, புண்ணியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்  மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை11 மணிக்கு நடக்கிறது. இதற்கு காஞ்சிபுரம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகிக்கிறார்.  இந்த கூட்டத்தில் மின் நுகர்வோருக்கான குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: