பழைய மாடலா இருக்கு சார்... லேப்டாப்பை ஒப்படைத்து விஏஓக்கள் போராட்டம்

விருதுநகர், நவ. 1: தமிழக அரசால் வழங்கப்பட்ட லேப்டாப்கள் பழைய மாடலாக இருப்பதால், பயன்படுத்த முடியவில்லை என விருதுநகரில் 33 விஏஓக்கள் தங்களது லேப்டாப்பை தாசில்தாரிடம் ஒப்படைத்து சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் விஏஓக்களின் பணியை எளிமையாக்க, அவர்களுக்கு அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்களில் நெட் வசதியில்லை. பழைய மாடலாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை.

இணையதள வசதிக்காக வழங்கப்பட்ட சிம் கார்டு 2ஜி வேகத்தில் செயல்படுவதால் லேப்டாப்களை பயன்படுத்த முடியவில்லை என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவர்கள் சங்கத்தின் சார்பில் 33 விஏஓக்கள் தங்களது லேப்டாப்களை சிம் கார்டோடு விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் வழங்கி சிறுவிடுப்பு எடுத்து போராடினர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன், வட்ட தலைவர் ரத்தினகுமார், வட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவில்லி.யில் போராட்டம்: திருவில்லிபுத்தூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் பாலுவிடம் விஏஓக்கள் தங்களது லேப்டாப்பை ஒப்படைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு வட்டார தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

Related Stories: