வேலூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

வேலூர், அக்.31:வேலூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு உடனடியாக 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும். 2வது ஊதிய மாற்றத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்க்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகங்களில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக பிஎஸ்என்எல் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, வேலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எப்டிஇ மாவட்ட செயலாளர் அல்லிராஜா, ஏஐபிஎஸ்என்எல்இஏ மாவட்ட செயலாளர் குருபிரசாத், டிஇபியு மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இந்தியா முழுவதும் 2.25 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதால் நேற்று அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Stories: