அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 251 மனுக்கள் குவிந்தன

அரியலூர்,அக்,23: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” கலெக்டர் விஜயலட்சுமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதி உதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 251 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கருப்பிலாக்கட்ளை மதுரா, கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் ராமன் பூச்சிக்கொல்லி மருந்தின் நெடி காரணமாக உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்தமைக்காக அவரின் வாரிசுதாரரான மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் விஜயலட்சுமி  வழங்கினார்.

Related Stories: