காவு கேட்கும் மின் கம்பங்கள் மின்சாரத் துறை கவனிக்குமா?

ஆண்டிபட்டி, அக். 17: ஆண்டிபட்டி பகுதியில் காவு கேட்டு நிற்கும் மின் கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உயிர் பலி நேரிடும் முன் மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏராளமானோர் விவசாயிகளாவும் விவசாய கூலியாகவும் உள்ளனர். இந்நிலையில் சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் ஊன்றப்பட்ட மின் கம்பங்களின் சிமென்ட் கற்கல் உதிர்ந்து, கம்பிகள் துரு பிடித்து வெளியில் தெரிகிறது. மேலும் கம்பங்கள் உருக்குலைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் மின்கம்பங்களினால் உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஊன்றப்பட்ட மின் கம்பங்கள் மிகவும் பழமையானது என்பதால், எப்போது கீழே விழுந்து விடும் என்ற அச்சத்தில் பயந்து பயந்து விவசாய வேலைகளை செய்து வருகின்றோம். உயரழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பங்களால் உயிர்பலி ஏற்படும் முன் புதிய மின் கம்பங்களை நட்டு உயிர் பலியை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.எனவே மின்சாரத்துறையினர் ஆண்டிபட்டி பகுதியில் சேதமுற்று நிற்கும் பழைய, புதிய மின் கம்பங்களை அகற்றி, உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: