பேரிடர் தடுப்பு ஒத்திகை

சாயல்குடி, அக்.17: சாயல்குடியில் பேரிடர் தடுப்பு முறைகள் குறித்த ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சாயல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள், மீட்பு முறைகள் குறித்த ஒத்திகை முகாம் நடந்தது. முகாமிற்கு கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். துணை தாசில்தார்கள் செந்தில்வேல்முருகன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் சார்லஸ் தலைமையிலான வீரர்கள் பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை செய்முறை செய்து காட்டினர்.

சாயல்குடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு ஒழிப்பு மற்றும் தடுக்கும் முறை குறித்து விளக்கமளித்தனர்.பிறகு பேரிடர் குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர்.நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஜெயபிரதா, வருவாய்ஆய்வாளர் பிரசாத், வி.ஏ.ஓ ஜெயக்கொடி, மாரிப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: