தேசிய அளவிலான கடிதப்போட்டி

தொண்டி, அக்.17: தொண்டியில் அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப்போட்டி நடைபெற்றது.நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் முற்றிலுமாக குறைந்துவிட்டது. மீண்டும் கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அஞ்சல் துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் ‘என் தாய் நாட்டிற்கு கடிதம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. இக்கடிதம் அஞ்சல்துறைக்கு அனுப்பப்படுகிறது. இதில் தேசிய அளவில் வெற்றி பெறும் கடிதத்திற்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் தலைமை வகித்தார்.

அஞ்சல் துணை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். அஞசலக ஊழியர்கள் குமார், போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: