ஐஓசியில் தொழிலக பாதுகாப்பு தீத்தடுப்பு ஒத்திகை

திருச்சி, அக்.11:  தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளின்படி பேரிடர் தொழிற்சாலைகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவசர நேரத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நடத்தப்பட வேண்டும். அதன்படி இந்த பயிற்சி ஒத்திகை திருச்சி வாழவந்தான்கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நேற்று நடந்தது. முதுநிலை முனைய மேலாளர் சுஜாதா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த தீயணைப்பு தடுப்பு ஒத்திகையில் தொழிற்சாலை தொழிலாளர்கள், தீயணைப்புக் குழு, தீயணைப்பு உதவிக்குழு மற்றும் மருத்துவ பாதுகாப்பு குழு என மூன்று குழுக்களாகப் பிரிந்து, தமிழ்நாடு தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வண்டிகள் மற்றும் மியூட்சுவல் எய்ட் உறுப்பினர்களின்,

அதாவது பாரத மிகு மின் நிலையம், ஹச்.ஏ.பி.பி., ஓ.எப்.டி. தீயணைப்பு வண்டிகளுடன் இணைந்து இந்த பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ரவி தலைமையில்  துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் மியூட்சுவல் எய்ட் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

Related Stories: