அரசு கல்லூரி மாணவர்கள் திரண்டனர்

திருவாரூர், அக்.11:  ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க கோரி திருவாரூரில் நேற்று அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்

டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூபெற்ற கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் மற்றும் ஊராட்சி உதவியாளர் என அனைவக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். மருத்துவப்படியாக மாதம் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் முனியன், துணை தலைவர்கள் நடராஜன், பெத்தபெருமாள், தமிழரசன் உட்பட பலர்

கலந்து கொண்டனர்.

Related Stories: