சத்துணவு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு பேரணி

திருச்சி, செப்.21: திருச்சியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணிக்கொடை ரூ.5லட்சமாக உயர்த்த கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடந்தது. திருச்சியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 30 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு பேரணி வெஸ்ட்ரி பள்ளியில் துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை நடந்தது. மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் திலகவதி, ஜெயராஜ், சேட்முகமது, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் சிறப்பு முறை காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடன் நிரப்ப வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

Related Stories: